அதிமுக கூட்டணியில் சீட் இல்லை. புரட்சி பாரதம் கட்சி இன்று அவசர ஆலோசனை..!

Siva

வெள்ளி, 22 மார்ச் 2024 (08:13 IST)
அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று புரட்சி பாரதம் கட்சி சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அந்த கட்சிக்கு சீட் எதுவும் ஒதுக்காத நிலையில் அக்கட்சி இன்று அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணி கட்சிகள் குறித்த தொகுதிகள் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சி மட்டும் இருப்பதாக அறிவிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருப்பதாக புதிய பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியான வேட்பாளர்கள் அறிவிப்பில் அனைத்தும் 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்துவிட்ட நிலையில் புதிய பாரதம் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அதிமுக கூட்டணியில் சீட்டு ஒதுக்கப்படாத நிலையில் புரட்சி பாரதம் கட்சி இன்று அவசர ஆலோசனை செய்ய வைப்பதாக கூறப்படுகிறது.  இந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் , ஆலோசனை கூட்டத்திற்கு  கைபேசி கட்டாயமாக அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்