இலவசமாவே வந்து படம் பாருங்க.. காசெல்லாம் வேணாம்! – கடலூர் தியேட்டர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:24 IST)
கொரோனா காரணமாக நீண்ட மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் திரையரங்கம் ஒன்றின் அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா காலமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதனிடையே திரைப்பட தயாரிப்பாளர்களோடு திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட விபிஎஃப் கட்டணம் தொடர்பான விவகாரத்தால் புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னதாக வெளியான படங்களை திரையரங்குகள் ரீ ரிலீஸ் செய்து வருகின்றன. இந்நிலையில் கடலூர் வட ஆற்காடு ரோட்டில் உள்ள திரையரங்கம் அறிவித்துள்ள ஆஃபர் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று முதல் தீபாவளி வரை திரையரங்கில் படம் பார்க்க கட்டணமில்லை என்றும், யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பார்க்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடலூர் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்