உதித் சூர்யா போலவே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 மாணவர்களும், ஒரு மாணவியும் மோசடி செய்துள்ளனர். அந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் போலீஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் மாணவர்கள் தங்கள் தந்தையார்தான் இதை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள்.
தற்போது சிக்கிய மூன்று பேரும் உதித் சூர்யாவின் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் 4 பேரின் குடும்பங்களும் திட்டமிட்டே இதை செய்திருப்பதாக போலீஸார் கணிக்கின்றனர். இதுகுறித்து தெரிவித்த போலீஸார் ”இது இந்த நான்கு பேரோடு மட்டும் நின்றுவிடவில்லை, தேசிய அளவில் நிறைய பேர் இதுப்போன்ற மோசடிகளில் ஈடுப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆள்மாறாட்டம் தவிர விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுப்பட்ட ஆசிரியர்களும் கையூட்டு பெற்று மோசடியில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளனர்.