அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

செவ்வாய், 21 மார்ச் 2023 (16:07 IST)
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறிய போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியர்கள் தற்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊழியமாக பெற்று வருகின்றனர்.
 
இவர்களுக்கு 5000 ரூபாய் உயர்த்தப்படும் என்றும் இனி அவர்கள் 15000 என ஊதியம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து பொதுப்பணி துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்