அண்ணா சாலையில் அனாதையாக ரூ.500 கட்டுக்கள்.. போலீசார் அதிர்ச்சி..!

சனி, 18 மார்ச் 2023 (15:56 IST)
புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலையில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சோரியில் உள்ள அண்ணாசாலையில் கேட்பாரின்றி ஒரு பை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பையில் வெடிகுண்டு இருக்கலாம் என்று கருதி வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல் துறையினர் உடனடியாக சம்பவம் இடத்திற்கு வந்தனர். 
 
இந்த நிலையில் அந்த பையை திறந்து பார்த்தபோது போலீசருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கட்டு கட்டாக ரூபாய். ₹500 நோட்டுகள் இருந்ததாக தெரிகிறது. பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றி விடிய விடிய எண்ணி பார்த்ததில்லை அதில் 49 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
உடனடியாக அந்த பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அண்ணா சாலையின் அருகே கேட்பாரற்று 500 ரூபாய் கட்டுகள் கட்டு கட்டாக இருந்த சம்பவம் பெரும் பரபரத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்