அனைத்து பல்கலைக்கழகத்தில் பணி புரிபவர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் - அமைச்சர் பொன்முடி

சனி, 18 மார்ச் 2023 (18:33 IST)
அனைத்து பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணிபுரிபவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம்  மற்றும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கட்டணம் ஆகிய கோரிக்கைகள் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். 
 
இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாணவர்களிடம் பழைய தேர்வு கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்றும் இதனை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்