அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசனை திடீரென முற்றுகையிட்ட பொதுமக்கள்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:15 IST)
அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர்களை திடீரென செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
செங்கல்பட்டில் உள்ள நேதாஜி நகர் என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அந்த பேருந்து நிலையத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று செங்கல்பட்டுக்கு சென்ற அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர்களிடம் நேதாஜி நகரில் புதிய பேருந்து நிலையம் வேண்டாம் என்று கூறுவதற்காக பொதுமக்கள் சென்றனர்
 
ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நேதாஜி நகரில் தாங்கள் குடியிருந்து வருவதாகவும் புதிய பேருந்து நிலையம் என்ற பெயரில் தங்களை அகற்ற முயற்சிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் செங்கல்பட்டுக்கு வந்த அமைச்சர்கள் பொதுமக்களால் முற்றுகை இடப்பட்டதால் அது பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்