போராட்டம் நடத்துங்க!? இந்த 3 மாவட்டங்கள் முதல் டார்கெட்! - தவெக விஜய் அதிரடி!?

Prasanth Karthick

வியாழன், 6 மார்ச் 2025 (11:30 IST)

தமிழக வெற்றிக் கழகம் மாவட்டம்தோறும் மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி போராட்டங்களை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், விரைவில் பூத் கமிட்டி மாநாடும் நடைபெற உள்ளது. 

 

இதற்கிடையே தவெக மாவட்ட பொருப்பாளர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை ஆய்ந்து அறிந்து அதற்கான போராட்டங்களை தொடங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சி உள்பட யார் தவறு செய்திருந்தாலும் என்ன நடந்தது என்பதை தெளிவாக அறிந்து மக்களுக்கும் தெரியப்படுத்தும்படி போராட்டங்களை நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போராட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம் விஜய்.

 

முதற்கட்டமாக தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற உள்ளதாம். ஆனால் இதில் விஜய் கலந்துகொள்ள மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth,K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்