கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (20:24 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றமும் தமிழக அரசும் பலமுறை எச்சரித்தும் வேலைநிறுத்தத்தை ஆசிரியர்கள் தொடர்ந்து வருவதால் தமிழக அரசும் வேறு வழியின்றி அதிரடி நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தது.
 
முதல்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை காலையில் கைதாகி மாலையில் விடுதலையான ஆசிரியர்கள் தற்போது ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டதால் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
 
தற்போது அடுத்த அதிரடியாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் போராட்டம் வாபஸ் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்