மதுசூதனனுக்கு வெறும் 5 தான், ஆனால் தினகரனுக்கு 77: இது என்ன கணக்கு?

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (04:36 IST)
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் இரு அணி வேட்பாளர்களான டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் தங்களுடைய சொத்து விபரங்களை வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர்.


 


இதன்படி சசிகலா அணியின் வேட்பாளராகிய தினகரனின் குடும்ப சொத்தின் மதிப்பு ரூ77.96 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. தினகரனின்  மனைவியிடம் 1,048 தங்கம் மற்றும் 37.17 கிராம் வைரம் உள்ளது

ஆனால் ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு ரூ.ரூ.1.37 கோடி சொத்துக்களும் அவரது மனைவி பெயரில் ரூ.3.30 கோடி மதிப்பு சொத்துக்களும், மொத்தம் ரூ.4.67 கோடி சொத்துக்களும் உள்ளது.

அதேபோல் திமுக வேட்பாளர் மருதுகணேஷூக்கு அசையும் சொத்து மதிப்பு ரூ.2,79,531 உள்ளது என்றும் அவரது மனைவி பெயரில் ரூ.7,08,606 உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளத்.
அடுத்த கட்டுரையில்