தனியார் பால் பாக்கெட்டுகள் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:36 IST)
ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தியிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்காக ஆவின் நிறுவனம் பால் விற்பனை விலையை உயர்த்தியது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள்.

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் தங்கள் பால் பாக்கெட் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியுள்ளார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் கொடுப்பதை விட குறைந்த அளவே கொள்முதல் விலை வழங்குவதாகவும், விற்பனை விலையை மட்டும் அதிகரித்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்