திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் கடந்த ஆண்டு ஜனவரியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த சக்திவேல் இன்று அதிகாலை 4:30 மணியளவில் ஜெயில் கம்பியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.