இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: இட ஒதுக்கீடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இருந்தாலும் எந்த விதத்திலும் சமூக நீதி மீறப்படவில்லை. ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதுபோல் திரு. ஸ்டாலின் அவர்கள் 37 கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் @mkstalin தன்னுடைய நிர்வாக தோல்வியை மறைக்க சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு,தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும்,தமிழக மக்களின் நலனுக்காகவும் முடிந்தால் ஏதாவது செய்யும்படி வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.