பிறரைப் பார்த்து ஊழல் கட்சி என்ற வார்த்தையை சொல்லும் தகுதியே பிரதமர் மோடிக்கு கிடையாது. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி இம்முறை மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றன.
மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிறரைப் பார்த்து ஊழல் கட்சி என்ற வார்த்தையை சொல்லும் தகுதியே பிரதமர் மோடிக்கு கிடையாது. தேர்தல் பத்திரம் மூலம் கொள்ளையடித்தது, பி.எம். கேர் நிதியை கணக்குக் காட்டாதது என பாஜக அனைத்தையும் மூடி மறைக்கிறது. குற்றச்சாட்டு இருப்பவர்கள் பாஜகவில் சேர்ந்தால் கறைபடியாதவர்களாக மாற்ற வாஷிங் மெஷினை மோடி வைத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.