ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தகவல்வெளியானது.
இந்நிலையில், பல்வேறு தொழில் செய்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மக்கள் பயனடையும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழக அரசு, கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.