மதுபானங்களின் விலை உயர்கிறது - டாஸ்மாக் நிர்வாகம்

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:38 IST)
தமிழகத்தில் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது

இந்த மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரொனா காலக்கட்டத்திலும்கூட தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
`

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்