பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜா - குடியரசுத் தலைவர் வாழ்த்து

சனி, 2 ஜூன் 2018 (10:42 IST)
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்து மக்கள் மனதை கொள்ளையடித்தவர் இளையராஜா. அவர் இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
“இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்