வெனிசுலா: அதிபராக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ

வெள்ளி, 25 மே 2018 (14:07 IST)
வெனிசுலா நாட்டில் நடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற நிக்கோலஸ் மதுரோ அதிபராக இன்று பதவியேற்றார்.
 
வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த சாவேஸ் மரணம் அடைந்ததை அடுத்து கடந்த 2013ம் ஆண்டு நிக்கோலஸ் மதுரோ புதிய அதிபராக பதவி வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் பணவீக்கம், உணவு பற்றாக்குறை உள்ளிட்டவை அதிகரித்து வந்தது. இதனால் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினர்.
 
அந்நிலையில், அங்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் எதிர்கட்சிகள் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்தலை புறக்கணித்தனர். இதனால் நிக்கோலஸ் மதுரோ 67.7 சதவீத வாக்குகளை பெற்று தனி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றிபெற்றார்.
 
இந்த வெற்றிக்கு அந்நாட்டு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமெரிக்கா வெனிசுலா நாட்டில் நடந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை சீர் குலைப்பதாக கூறி அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது.
 
இந்த நிலையில் வெனிசுலா நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் அதிபராக மீண்டும் பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்