பணம் ஈட்டுவதற்கான மூல ஆதாரம் எங்களிடம் இல்லை – சொத்து ஏலம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (17:26 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் விடப்பட போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ள நிலையில், “கடன் பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கட்ட வேண்டிய கடன் தொகை 5.52 கோடி கட்டாததால் அவரது சொத்துக்களை ஏலத்தில் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்தது.

அதை தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் “நாங்கள் நடத்தி வரும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் நிதி பற்றாக்குறையை சமாளிக்கவே வங்கியில் கடன் வாங்கினோம். கல்லூரியில் மாணவர்களிடம் இருந்து பெறும் தொகை கல்லூரியை மேலாண்மை செய்ய போதுமானதாக இல்லை. மேலும் வேறு வழிகளில் பனம் ஈட்ட எங்களிடம் எந்த மூலாதாரமும் இல்லை. நல்லவர்களுக்குதான் சோதனைகள் வரும். இந்த கடன் பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமைக்கே இந்த நிலையா என தேமுதிக தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்