அமலாக்கத்துறை முதலில், துரைமுருகன் வீட்டுக்குத்தான் ரெய்டு போக வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!

Siva

புதன், 3 ஏப்ரல் 2024 (08:58 IST)
அமலாக்கத்துறை முதலில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு தான் ரெய்டு சென்றிருக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று பிரச்சாரம் செய்தார். அங்கு அவர் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது இந்த தொகுதியின் எம்பி ஆக இருந்த கதிர் ஆனந்த் ஒரு முறையாவது தொகுதி பக்கம் வந்து மக்களை பார்த்திருக்கிறாரா? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறாரா?

அதுமட்டுமின்றி அவர் ஒரு உளறுவாயராக இருக்கிறார், பெண்களை மதிக்காமல் கேலி செய்கிறார், ஒட்டுமொத்த பெண்களும் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமலாக்கத்துறையினர் எங்கெங்கோ ரெய்டு செய்து வருகிறார்கள், முதலில் அவர்கள் அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு தான் ரெய்டு போயிருக்க வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து மக்களின் வரிப்பணத்தை காப்பாற்ற வேண்டியது மிக மிக முக்கியம் என்றும் பிரேமலதா பேசினார்

மேலும் லாட்டரி, கஞ்சா, மது விற்பனை செய்பவர்கள் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், லாட்டரி , கஞ்சா விற்பவர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்