கெஜ்ரிவால் போலவே அமலாக்கத்துறை சம்மன்களை புறக்கணித்த மஹுவா மொய்த்ரா.. கைது செய்யப்படுவாரா?

Siva

வெள்ளி, 29 மார்ச் 2024 (07:32 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அனுப்பிய 9 சம்மன்களை புறக்கணித்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா மூன்று சம்மன்களை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது

அந்நிய செலாவணி சட்ட விதிமீறல் தொடர்பாக மார்ச் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியது.

ஆனால் அந்த சம்மனை புறக்கணித்த அவர் ஆஜராகாமல் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே அவர் இரண்டு முறை அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்த நிலையில் இது மூன்றாவது முறை என்பதால் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ: ஓபிஎஸ் பரவாயில்லை.. ஏசி சண்முகம் பெயரில் 9 சண்முகங்கள் போட்டி.. வேலூரில் பரபரப்பு..!

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்