ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்..! அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வி..!!

Senthil Velan

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (16:21 IST)
மதுபானக் கொள்கை முறையீடு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு, 6 மாதங்களுக்குப் பின் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் தொடர்பு உள்ளதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் ஜாமின் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபணமாகவில்லை என்றும், குற்றச்சாட்டிற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை இதுவரை தாக்கல் செய்யவில்லை என அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எடுத்துரைத்தார். 
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றாலும், அதற்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. போதிய ஆவணங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற கண்டனத்தையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ALSO READ: வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் முறைகேடு..! லஞ்ச ஒழிப்பு துறைக்கு முக்கிய உத்தரவு..!
 
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு, ஜாமின் வழங்க அமலாக்கத்துறை ஒப்புக் கொண்டதை அடுத்து உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்