கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பணத்தை வைத்து திமுக வாயை அடைத்துள்ளது: பிரேமலதா

Mahendran

செவ்வாய், 25 ஜூன் 2024 (15:31 IST)
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து அவர்களுடைய வாயை திமுக அடைத்துவிட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார் 
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் இன்று தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா பேசியபோது ’கள்ளக்குறிச்சி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் இதுவரை ஏன் அவர்களின் குடும்பத்தினர்களை சந்திக்கவில்லை
 
ஆனால் மகனை அனுப்பி 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பினார். மதுவை ஒழிக்க வேண்டும் என எதிர்கட்சியாக இருந்தபோது வீட்டு வாசலில் கருப்புச்சட்டை அணிந்து ஸ்டாலின் போராடினார் என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை ஏன் செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
 
ஸ்டாலின் தங்கை கனிமொழி பேசியபோது டாஸ்மாக் மதுவினால் தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என்று கூறினார். ஆனால் தற்போது திமுக ஆட்சி வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை ஏன் மூடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தவர்களின் வாயை திமுக அரசு பணம் கொடுத்து  அடைத்து விட்டது என்றும் அவர் குற்றம் காட்டினார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்