தமிழகத்தில் கள்ளச்சாராய கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில் கள்ளச்சாராயம் காய்சியதே அதிமுக காரங்கதான் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் பரிதாபமாக பலியான நிலையில் இந்த விவகாரம் அரசியல் கட்சிகள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராயத்தால் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மு க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் பொன்முடி அதிமுக ஆட்சியில் இருந்தே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது என்றும் குறிப்பாக அதிமுக கட்சிக்காரர்கள் தான் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகிறார்கள் என்றும் ஏதோ புதிதாக இப்போதுதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போல் எடப்பாடி பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.