இந்த நிலையில் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி கூறியதோடு செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறிய உச்ச நீதிமன்றம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது