தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

Mahendran
வியாழன், 9 ஜனவரி 2025 (16:48 IST)
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் வந்ததால்தான் அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது என்றும் அதேபோல் தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தொகை கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் இன்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு  தொகுப்பில் பணம் இல்லாதது ஏன் என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசு தொகையாக 2500 வழங்கப்பட்டது என்றும் ஆனால் அப்போது 5000 கொடுக்க வேண்டும் என்று திமுக கூறியது என்றும் ஆனால் இப்போது ஆயிரம் கூட கொடுக்கவில்லை என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் ’2021 ஆம் ஆண்டு தேர்தல் வந்ததால் தான் நீங்கள் 2500 ரூபாய் கொடுத்தீர்கள், ஆனால் இப்போது தேர்தல் காலமில்லை, பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பாக்கலாம்’ என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல அமைச்சர் சக்கரபாணி இது குறித்து பேசும்போது ’பொங்க பரிசு தொகுப்பு திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் தொடங்கி வைத்தார் என்றும் அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை என்றும் ஆனால் தேர்தல் வந்த போது தான் பரிசுத்தொகை வழங்கியது என்றும் கூறினார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்