இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை அதிகரிக்கப்படுமா? தேர்தல் படுத்தும்பாடு..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (07:57 IST)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு  லோக்சபா தேர்தல் வரையறுப்பதை அடுத்து பொங்கல் பரிசு தொகை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக அரசு தகுதி உள்ள மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கி வருகிறது,. அது மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் வெள்ள நிவாரண நிதியும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதை அடுத்து ஜனவரி மாதம் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தலைமை செயலக வட்டாரங்கள் இது குறித்து கூறியபோது இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை 2000 கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே பொங்கல் பரிசு தொகை 2000 மகளிர் உரிமைத் தொகை ஆயிரம்   என 3000 கிடைக்கும் என்றும்  வெள்ளம் பாதித்த பகுதிக்கு கூடுதலாக 6000 என மொத்தம் 9000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்