அயலான் படத்துக்கு தடைவிதித்த நீதிமன்றம்.. ஆனாலும் பொங்கல் ரிலீஸை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!

திங்கள், 18 டிசம்பர் 2023 (09:54 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்குமாறு டி எஸ் ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவர்களின் மனுவில் “அயலான் திரைப்படத்தை தயாரித்த 24 AM நிறுவனம் இந்த படத்துக்காக 10 கோடி ருபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த கடனை ஏற்றுக்கொண்ட கே ஜே ஆர் பிலிம்ஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துள்ளது. மீதம் பணத்தைக் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது” என வழக்கு தொடுத்திருந்தது. இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம் அயலான் படத்தை நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக் கூடாது தடை விதித்துள்ளது.

ஆனால் இப்போது அயலான் படத்தைத் தயாரிக்கும் கே ஜே ஆர் பிலிம்ஸ் நிறுவனம் “படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இந்த வாரத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. மேலும் பிரம்மாண்டமான பொங்கல் ரிலீஸுக்கு தயாராகுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனை ரிலீஸூக்கு முன்னதாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்