அன்று என் கார் மீது செருப்பு வீசிய போது? பொன்னார் பதிலடி!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (10:53 IST)
நாங்களும் திமுகவோடு சமரசம் செய்யமாட்டோம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வருக்கு பதிலடி.

 
திமுக பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் செய்துகொள்ளாது என்றும் எங்களுக்குள் மத்திய, மாநில அரசு இடையிலான உறவு மட்டுமே இங்கே உள்ளது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், கைகட்டி வாய் பொத்தி நிற்க நான் ஆளில்லை. நான் கலைஞரின் பிள்ளை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திமுக தரப்பில் பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்களும் அவர்களோடு சமரசம் செய்யமாட்டோம்.

நிதியமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் போலீசார் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என தெரியவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

அப்போது மத்திய மந்திரியாக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது எனது கார் மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. திமுக அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆனால் அமைச்சர் மீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்