திருமாவளவனின் 60வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், சசிகலா வாழ்த்து!

புதன், 17 ஆகஸ்ட் 2022 (10:02 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி இந்தியாவை கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம் என்றும் மணி விழா காணும் அன்பு சகோதரர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன் என்றும் பதிவு செய்துள்ளார்
 
அதேபோல் சசிகலா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: அன்பு சகோதரர் திருமாவளவன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும்,  நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
 
 திருமாவளவன் பிறந்த நாளுக்கு மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்