50 ரூபாய்க்கு புடவை; அலைமோதிய பெண்கள்! – பொள்ளாச்சி கடைக்கு அபராதம்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:58 IST)
பொள்ளாச்சியில் துணிக்கடை ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடைவீதியில் ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. ஜவுளிக்கடை 100வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.50க்கு புடவையும், ரூ.10க்கு வேட்டியும் விற்பதாக அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் காலை முதலே மக்கள் பலர் துணிகள் வாங்க கடையில் குவிந்துள்ளனர். கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் பலர் சமூக இடைவெளி இன்றியும், மாஸ்க் அணியாமலும் ஜவுளிக்கடையில் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள் ஜவுளிக்கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதமாக விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்