டெல்லி செங்கோட்டை உச்சியில் விவசாய கொடியை பறக்க விட்ட இந்திய விவசாயிகள்!

செவ்வாய், 26 ஜனவரி 2021 (14:22 IST)
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்து டிராக்டர் பேரணியை துவங்கினர். தற்போது நிலைமை கைமீறிப் போன நிலையில் டெல்லி காவல் துறை சார்பில் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகள் யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.ஆனாலும், போராட்டத்தில் முழு வீச்சில் இறங்கிய விவசாயிகள் டெல்லி முழுவதும் பேரணியாக சென்று டெல்லி செங்கோட்டையின் உச்சியில் விவசாயிகள் தங்கள் விவசாய கொடியை ஏற்றினர். 

இதையடுத்து போலீசார் அவர்களை கலைக்களப்புடன் களைந்து செல்ல கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாட்டு மக்களுக்கு உணவளித்து வரும் விவசாயிகள் உரிமைக்காக நடத்திவரும் போராட்டம் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்