அமர் பிரசாத்தை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைப்பு! தலைமறைவாகிவிட்டாரா?

Mahendran

வியாழன், 25 ஜனவரி 2024 (11:19 IST)
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தலைமறைவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்ய தனி படை அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது . பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கியதாக அமர் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள அமர் பிரசாத் ரெட்டியை வலை வீசி தேடி வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் கொடி வைக்கும் பிரச்சனையில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியானார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்