பிரேமலதாவுக்கு மத்திய அமைச்சர் பதவி.. ஆனால் பாஜக நிபந்தனையால் அதிர்ச்சி..!

Mahendran

புதன், 24 ஜனவரி 2024 (14:54 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் பிரேமலதாவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவதாக பாஜக கூறியுள்ளதாகவும் ஆனால் அதற்கு பாஜக விதித்துள்ள நிபந்தனையால் பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜகவின் கணக்கு வேறு மாதிரியாக உள்ளதாக கூறப்படுகிறது. 
 
சின்ன சின்ன கட்சிகளை பாஜகவுடன் கூட்டணியாக சேர்ப்பதை விட அவர்களை பாஜகவிலேயே சேர்த்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக  இருக்கிறது. குறிப்பாக டிடிவி தினகரன், ஜிகே வாசன் மற்றும் பிரேமலதா ஆகிய மூன்று பேர் நடத்தும் கட்சிகளை கலைத்துவிட்டு அவர்கள் தங்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்றும், அவ்வாறு  பாஜகவில் இணைய ஒப்புக்கொண்டால் மூவருக்குமே  மத்திய இணை அமைச்சர் பதவி தர இருப்பதாகவும்  ஆஃபர் கொடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
இதற்கு பிரேமலதா உள்பட மூவரும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்