கேலோ: உணவுத் தட்டுபாடு என்பது வதந்தி! தமிழ்நாடு ஃபேக்ட் செக் குழு தகவல்

Sinoj

புதன், 24 ஜனவரி 2024 (16:29 IST)
கேலோ இந்தியா போட்டிகளை கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டு அரங்கங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள  நிலையில் இப்போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்று  திறமையை நிரூபித்து வருகின்றனர். இந்த போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், கேலோ விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு உணவைக்கூட வழங்க முடியாத அளவிற்கு சீர்கேடு அடைந்துள்ளது திறனற்ற திமுக அரசு என்று தமிழக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்தது. 

இதுகுறித்து, தமிழ்நாடு ஃபேக்ட் செக் குழு தெரிவித்துள்ளதாவது:

‘’வீரர், வீராங்கனைகளின் கூடத்தின் படங்கள் இங்கு உணவு மற்றும் உணவுக் இணைக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் ஒன்றிணைந்து நடத்தும் இந்த விளையாட்டுப் போட்டியில் உணவுத் தட்டுப்பாடு என்ற வதந்தி தற்பொழுது இணையதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

மதுரையில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு என்று வதந்தி பரவிய நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களும், தமிழ்நாடு விளையாட்டுத் துறைஅதிகாரிகளும் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் 22.01.2024 அன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும், தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.

இந்த கேலோ விளையாட்டுப் போட்டியின் உணவுப் பட்டியலை ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் சரி பார்த்து அனுமதி அளித்துள்ளது. ஆகவே, இது போன்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்’’என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்