ஜனவரி 1 புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாடுகள்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (17:33 IST)
2022ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்னும் மூன்று நாள்களில் உள்ளதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
 
நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட அனுமதி இல்லை என்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்றும் மீறினால் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 
டிசம்பர் 31ஆம் தேதி இரவு மற்றும் புத்தாண்டின் போது கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் குளிக்கக் கூடாது என்றும் பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 
அசம்பாவிதம் இல்லாத விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்