போலீஸ் பாதுகாப்பு, பிரச்சாரங்களும் ரத்து: விவாதப் பொருளான கமல்!

செவ்வாய், 14 மே 2019 (10:50 IST)
கமலின் சர்ச்சை பேச்சு காரணமாக அவர் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் நேற்று  அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். 
 
கமலின் இந்த பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். கமலின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் நேற்று அவர் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்ப்பட்டது. 
அந்த வகையில் இன்று அவர் ஒட்டப்பிடாரத்தில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அதோடு, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது கமல் ஊடங்களின் விவதாப்பொருளாக மாறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்