கடந்த 2016ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 7 பேர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல்துறையினர் விசாரணை செய்தபோது 'கொள்ளையடித்த பணம் முழுவதையும் சரிசமமாக பிரித்து செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் கொள்ளை நடந்த மூன்றே மாதத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் முழு பணத்தையும் செலவு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி வரும் போலீசார் அவர்களிடம் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையடித்த பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.