சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, அங்கு காவல் பணியில் இருந்த காவலர் மாயழகு திடீரென மேடையேறி ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசினார். அது பெரும் வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் அவர் கொண்டாடப்பட்டார்.
அப்போது, அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மாணவர்கள் போலீசாரிடம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உயர் போலீஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்து 10 மாதங்களுக்கு பின், தற்போது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காவல் துறை அவர் மீது குற்றம், சாட்டியுள்ளது. இது தொடர்பான விசாரணை முடியும் அவரை அவருக்கான சம்பள மற்றும் பதவி உயர்வு போன்றவை நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.