பட்டாசு வெடித்த மாணவர்களுக்கு தண்டனையா? கொதித்தெழுந்த இந்து முன்னணி

செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:53 IST)
திருச்சி பாலக்கரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்த மாணவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகவும், பட்டாசு வெடிக்காத மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது



 
 
இதனையடுத்து திருச்சியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் குறித்து திருச்சி போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்றிரவு காவல்நிலையத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் உறுதி அளித்ததை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்