தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் தாக்குதலாலேயே அவர்கள் இறந்ததாக பலர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் போலீஸார் மக்களை வெவ்வேறு இடங்களில் தாக்கிய மற்றும் அத்துமீறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் ராஜா. வழக்கம்போல கடையை அவர் திறந்து வைத்திருந்த நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ரகுராமன் என்பவர், ராஜா கடையை திறந்து வைத்திருந்ததற்கு ஆவேசமாக பேசியதுடன் அங்கிருந்த எடை மெஷினையும் தூக்கி போட்டு உடைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.