பெண்களை ஈவு இரக்கமின்றி அடிக்கும் போலீஸின் வெறியாட்டம்: அதிர்ச்சி வீடியோ!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (13:56 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது தமிழக அரசு. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. பெண்கள் என்று பார்க்காமல் அடித்துள்ளனர் போலீஸ்.


 
 
போலீஸின் வெறியாட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த போலீஸ் பெண்கள் மீது ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.
 
சென்னையில் 15 ஆயிரம் போலீசாரை களமிறக்கிய அரசு சென்னை மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை இன்று அதிகாலை தடியடி நடத்தி கலைத்தனர்.

 

 
 
போலீசாரின் தடியடிக்கு அஞ்சிய ஆண்களும், பெண்களும், அருகேயுள்ள திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளுக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அந்த பகுதிக்குள் நுழைந்த போலீசார் போராட்டக்காரர்களை விரட்டி சென்று அடிக்க சென்றனர்.
 
இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி பெண்களை போலீசாரை தடுத்தி நிறுத்தினர். ஆனால் போலீசார் அதனை மீறு தொடர்ந்து முன்னேறினர். இதனால் சிலர் பக்கெட்டிலிருந்து தண்ணீரை தூக்கி போலீசார் மீது ஊற்றினர். இதனால் கோபமடைந்த போலீசார், பெண்கள் மீது தடியடி நடத்தினர்.
 
போலீசார் ஒவ்வொருவராக வந்து பெண்கள் மீது தடியடி  நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்