அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதி கேட்டு பாமக மகளிர் அணி இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக மகளிர் அணி சார்பில் பசுமைத்தாயகம் சௌமியா அன்புமணி தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில், காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைமை கூறியிருப்பதாகவும், இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
சமீபத்தில் இதே இடத்தில் தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற போது, அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இன்று தடையை மீறி பாமக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றால், சௌமியா அன்புமணி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.