ஆட்சி தப்பியது எப்படி? சோபிக்காத அதிமுக; செல்வாக்கை நிரூபித்த கூட்டணி கட்சிகள்!

வெள்ளி, 21 ஜூன் 2019 (15:27 IST)
அதிமுகவின் ஆட்சி தப்பியதற்கான முக்கிய காரணம் பாமக மற்றும் புதிய தமிழகம் கட்சி என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி எதையும் பதிவு செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. 
 
இந்நிலையில், அதிமுக வெற்றி பெற்ற அந்த 9 தொகுதிகளும் பாமக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் செல்வாக்கு அதிகமுடைய இடங்களாம். அதாவது, சோளிங்கர், அரூர். பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகளில் பாமகவின் வாக்குதான் அதிமுகவிற்கு கைகொடுத்துள்ளதாம். 
அதேபோல், நிலக்கோட்டை, பரம்மக்குடி, விளாத்திகுளம், சாத்தூர், மானாமதுரை ஆகிய தொகுதிகளின் வெற்றிக்கு புதிய தமிழகம் கட்சியின் செல்வாக்கு காரணம் என கூறப்படுகிறது. சூலூர் தொகுதியில் அனுதாப வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 
 
ஆக மொத்தம் கூட்டு கழித்தால், அதிமுகவின் ஆட்சி கவிழாமல் தப்பித்தற்கு பாமக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்