மோடி அறிவித்துள்ள ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று நடந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.. இதில் கலந்துகொள்வதற்காக அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் டெல்லி சென்றார். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் அதிமுக சார்பால ஓ பன்னீர் செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமிதான் கலந்து கொள்ள முடியும். இதனால் சி வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் தங்கள் கட்சியின் கருத்துகளை கடிதம் வாயிலாக அளித்துவிட்டு தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் பற்றி மத்திய அரசுக்கு எழுத்துப் பூர்வமாக அறிக்கை அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.