ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் வாழ்த்து

Webdunia
வியாழன், 19 மே 2016 (11:27 IST)
தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார்.


 

 
 
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
 
முன்னிலை நிலவரங்களே வந்து கொண்டிருக்கிறது. யாரும் வெற்றி பெற்றதாக இன்னமும் அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்து ஜெயலலிதா 6-ஆவது முறையாக ஆட்சியை பிடிப்பார் என பேசப்பட்டுவருகிறது.
 
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வெற்றிக்கு தனது வாழத்தை கூறியுள்ளார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
அடுத்த கட்டுரையில்