முதல்முறையாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட மோடியின் பேச்சு

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (11:25 IST)
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் முதல்முறையாக பிரதமர் மோடியின் பேச்சு நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நீக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் நடந்த மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். இவரிடம் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் சொற்ப ஓட்டுக்களில் தோல்வி அடைந்தார்.
 
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்  வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை வாழ்த்திய பிரதமர் மோடி, தோல்வி அடைந்த ஹரிபிரசாத் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பிக்கள், பிரதமர் மோடியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை வலியுறுத்தினர்.
 
இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பதாக வெங்கையா நாயுடு கூறியபோதிலும் காங்கிரஸ் எம்பிக்கள் விடாப்பிடியாக இந்த விஷயத்தை வலியுறுத்தி கொண்டு இருந்ததால் வேறு வழியின்றி பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்