பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் மாணவர்களின் நிலை என்ன?

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (09:25 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிவடைந்திருந்தாலும் ஒருசில தேர்வுகளை கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஒருசில மாணவர்கள் எழுதவில்லை. அந்த மாணவர்களுக்காக 27.7.2020 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது
 
இந்த நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
24.03.2020 அன்று நடைபெற்ற மார்ச்‌ 2020, மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகளான வேதியியல்‌, கணக்குப்பதிவியல்‌ மற்றும்‌ புவியியல்‌ (புதிய பாடத்திட்டம்‌ மற்றும்‌ பழைய பாடத்திட்டம்‌) பாடத்‌ தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, அவர்கள்‌ தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள்‌ மட்டும்‌ தற்போது வெளியிடப்படும்‌. 27.07.2020 அன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வினை எழுதும்‌ தேர்வர்களுக்கு மட்டும்‌, மறுதேர்வு முடிவடைந்த பின்‌, தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள்‌ வெளியிடப்படும்‌.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்