தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த விபரங்கள் சற்றுமுன் வெளியானது. வழக்கம்போல் மாணவியர் மாணவர்களை விட அதிக சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் 7127 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7,79,931 மாணவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவியரின் எண்ணிக்கை 4,24,285 என்றும், மாணவர்களின் எண்ணிக்கை 355,646 என்றும், அதில் பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை: 7,28,516 என்றும், தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை: 51,415 என்றும் குறிப்பிடத்தக்கது
இதில் தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களின் சதவிகிதம் 92.3% என்றும், மாணவியர் 94.80 தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவர்கள் 89.41% தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவியர் மாணவர்களை விட 5.39%அஇகம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது