ஹாஸ்டல் வார்டன் மிரட்டியதால் பிளஸ் ஒன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (11:01 IST)
திருச்செங்கோடு தனியார் பள்ளியில், ஹாஸ்டல் வார்டன் மிரட்டியதால் பயந்து போன மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், விருத்தீஸ்வரன்(16) என்ற மாணவன் தனியார் பள்ளியில், ஹாஸ்டலில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தான். சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் தங்களது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், பள்ளி முதல்வர் மற்றும் ஹாஸ்டல் வார்டன் கொடுத்த மிரட்டலின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு, தனது மகன் தற்கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
 
எனவே தனது மகன் மரணத்திற்கு காரணமான பள்ளி முதல்வர் மற்றும் ஹாஸ்டல் வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்